தற்போது 'கோடியக்கரை' என்று அழைக்கப்படுகிறது. வேதாரண்யத்திலிருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். பாற்கடலில் இருந்து கிடைத்த அமிர்தத்தைத் தேவர்கள் பருகியபின் மீதியை வாயுதேவனிடம் கொடுக்க, அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாகச் செல்லும்போது அது இத்தலத்தில் விழுந்து லிங்கரூபமாகத் தோன்றியது. எனவே, இத்தலத்தில் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். |